எனக்கு தலை­வலி, இருமல் என்­பன காணப்­பட்­டன. மேற்­கொள்­ளப்­பட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­களின் போது கொரோனா வைரஸ் தொற்­றுக்கு உள்­ளா­கி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது என்று கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்­கத்­துக்கு உள்­ளாகியுள்ள இத்­தாலி வாழ் இலங்கை பெண் தெரி­வித்­துள்ளார்.

குறித்த பெண்ணின் காணொளி உரை­யாடல் சமூகவலைத்­த­ளங்­களில் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.  

அந்தக் காணொளி உரை­யா­டலில் அவர் மேலும் தெரி­விக்­கையில், பிறி­தொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து எனக்கு வைரஸ் தொற்­றி­ய­தாகக் கூறினர். என்னை நன்­றாக பரி­சோ­தித்த பின்னர் எனக்கு தொற்று இருப்­ப­தாக உறு­திப்­ப­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஹொரன, ஹந்­த­பாங்­கொட எனது சொந்த இட­மாகும். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மையே இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.  கண­வ­ருக்கும் வந்து என்னைப் பார்ப்­ப­தற்கு அனு­ம­திக்க மாட்­டார்கள். என்னை தனி அறையில் வைத்­தி­ருக்­கி­றார்கள். மருந்­­தொன்று வழங்­கப்­பட்­டது. அது என்ன மருந்து என்­பது எனக்குத் தெரி­யாது. அதன் பின்னர் ஒன்றும் வழங்கப்படவில்லை. நான் இத்தாலிக்கு வருகைதந்து 10 வருடங்களாகின்றன. உணவு உண்ணவில்லை என்றார்.