குறுகிய பாதையால் அவதியுறும் வாகன சாரதிகள் 

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 01:23 PM
image

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பித்துள்ளமையால் தொடர் விடுமுறை காலங்களில் யாத்திரிகர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இவ்வாறு செல்லும் யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லத்தண்ணி பாதையையும் தியகல சந்தியூடான நோட்டன் நல்லத்தண்ணி பாதையையும் பாவித்து வருகின்றனர்.

இவ்வாறு தொடர் விடுமுறை காலங்களில் நோட்டன் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக வாகன சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இப்பாதையில் ஒரு சில பகுதிகளில் அகலம் குறைவாக இருப்பதால் சிவனொளிபாதமலைக்கு வரும் வாகனமும் வந்து விட்டு திரும்பி செல்லும் வாகனமும் அப்பகுதிகளில் ஒரே சந்தர்ப்பங்களில் செல்ல முடியாது வாகன நெரிசல் ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.

மேலும், இவ்வாறான பகுதிகள் குறித்து  இப்பகுதி வாகன சாரதிகள் அறிந்திருந்தாலும் வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் யாத்திரிகர்கள்  இவ்வாறான குறுகிய பாதை பற்றி அறியாமையால் இவ்வாறான வாகன நெரிசல் ஏற்படுவதால் சுமார் ஒரு மணி நேரம்  போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் இப்பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியிருப்பதாகவும் இதனை துரித கதியில் முன்னெடுத்து பணிகளை நிறைவு செய்ய உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20