உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் மத்தியில் பொய் தகவல்களும், வதந்திகளும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், தவறான தகவல்களைத் தடுப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் டிக்டொக்கில் இணைந்து  உண்மைத் தகவல்களைப் பதிவு செய்துள்ளது.

அந்த தளம் சில நேரங்களில் அநாகரீகமான உள்ளடக்கம், ஆபாசப் படங்கள் மற்றும் தவறான தகவல்களை ஊக்குவிக்கிறது என்ற அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் டிக்டொக்கை தடை செய்துள்ளன.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் சீன நிறுவனத்திற்கு புதிய வழியில் உதவ முன்வந்துள்ளது. இதில் எந்தவொரு பண கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

சில சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொரோனா வைரஸைப் பற்றி ஏராளமான போலி செய்திகளும் தவறான தகவல்களும் இருந்தபோதிலும், பேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவை இத்தகைய தகவல்களைக் குறைக்க முயற்சி செய்கின்றன. 

கொரோனா வைரஸைப் பற்றிய பரவலான தவறான தகவல்களை எதிர்த்துப் போராடும் முயற்சியில், உலக சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார ஸ்தாபனம் தனது டிக்டொக் பதிவில், கொரோனா வைரஸ் என்ன என்பது பற்றிய வீடியோவையும், சனிக்கிழமை ஒரு முககவசத்தை எப்போது, எப்படி அணிய வேண்டும் என்பது பற்றிய ஒரு வீடியோவையும் வெளியிட்டது.

இவ்வாறு தவறான தகவல்களைத் தடுப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் டிக்டொக்கில் இணைந்து உண்மைத் தகவல்களைப் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.