தீவிர நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் : வேட்பாளர்கள் தெரிவுகளும் வேகம் !

Published By: J.G.Stephan

04 Mar, 2020 | 12:13 PM
image

(ரொபட் அன்டனி)

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில்  பிரதான அரசியல் கட்சிகள்  தேர்த லில் கூட்டணி அமைத்து கள மிறங்குவது தொடர்பில் தீவிர நட வடிக்கைகளில் இறங்கியுள்ளன.

அதுமட்டுமன்றி வேட்பாளர் தெரிவுகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன.  மார்ச் மாதம்  12 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதி வேட்புமனு தாக்கல் செய்யும் காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கிடையில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் செயற்பாட்டில் கட்சிகள்  தீவிரமாக களமிறங்கியுள்ளன. பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதற்கே   நடவடிக்கை எடுத்துள்ளன.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி

ஆளும்  சிறிலங்கா  பொதுஜன பெரமுனவும்  சிறிலங்கா சுதந்திரக்கட்சியும்   இணைந்து  சிறிலங்கா பொதுஜன பெரமுன  என்ற கூட்டணியில்  மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன. தற்போது இரண்டு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பணிகள் துரிதமாக இயங்கி வருகின்றன. இம்முறை இந்த கூட்டணியின் சார்பாக  வியத்மக   அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளும்  தேர்தலில் போட்டியிட   எதிர்பார்த்துள்ளனர். எனவே    ஆசனங்களைப் பங்கிடும் நடவடிக்கைகளில் கூட்டணி  கட்சிகள் ஈடுபட்டுள்ளன.  ஆளும் கட்சி  கூட்டணியில் மேலும் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.  பிவித்துரு ஹெலஉறுமய, தேசிய சுதந்திர முன்னணி,  மற்றும் இடதுசாரி கட்சிகள்,  மலையக கட்சிகள் என பல்வேறு கட்சிகள்   ஆளும்  சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன    கூட்டணியில்   மொட்டு சின்னத்தில் போட்டியிட தயாராகிவருகின்றன.

ஆளும் கட்சி கூட்டணியின்  பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள   முன்னாள் அமைச்சர் பஷில்  ராஜபக்ஷ  வேட்பாளர்  தெரிவு தொடர்பில்   நடவடிக்கைகளை  முன்னெடுத்து வருகின்றார்.

சஜித் கூட்டணி

இதேவேளை  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலும்    ஐக்கிய தேசியக்கட்சி ரணில் தரப்பினர் யானை சின்னத்திலும் போட்டியிடுவதற்கு தயாராகி  வருகின்றனர். இரண்டு தரப்பினரையும்  ஒன்றிணைத்துதேர்தலில்   களமிறக்க   முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதிலும் ஐக்கிய தேசியக்கட்சி எதிர்வரும் தேர்தலில் பிளவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி   நேற்று முன்தினம்  ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக்கூட்டணியில் ஜாதிக  ஹெலஉறுமய,  தமிழ் முற்போக்கு கூட்டணி , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெறுகின்றன.இந்த  கூட்டணியின் சார்பிலும் தேர்தலில்  களமிறங்கும்   வேட்பாளர்களை  தெரிவு செய்யும்  பணிகள் தீவிரமாக   ஈடுபட்டு வருகின்றன.  

ரணில் யானை சின்னத்தில்...

அதேபோன்று ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் தரப்பினரும் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில்   அந்த தரப்பிலும் வேட்பாளர்களை  தெரிவு செய்யும் பணிகள்   தீவிரமடைந்துள்ளன.  எப்படியிருப்பினும் ரணில் மற்றும் சஜித்  தரப்பினரை ஒன்றிணைக்கும் முயற்சிகள்   தீவிரமடைந்துள்ளன.

மக்கள் விடுதலை  முன்னணி

இது இவ்வாறிருக்க மக்கள் விடுதலை முன்னணியானது தேசிய மக்கள் சக்தி என்ற  அமைப்பின் ஊடாக இம்முறை தேர்தலில் களமிறங்க தயாராகி  வருகின்றது. இது தொடர்பில்   மக்கள் விடுதலையின் ஏனைய கூட்டு கட்சிகளும் இணைந்து வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில்..

வடக்கு கிழக்கில்  இம்முறை பல்வேறு அணிகள்  தேர்தலில் களமிறங்கவுள்ளன.  இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் சார்ப்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்    வேட்பாளர்களை தெரிவு செய்யும்  பணிகளில் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.   கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்    இம்முறை  திருகோணமலை மாவட்டத்தில்  தேர்தலில்  களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் வடக்கின் முன்னாள்  முதலமைச்சர்  சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான அரசியல் கூட்டணி இம்முறை வடக்கில் களமிறங்கவுள்ளது.  இந்த   கூட்டணியின் சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள்  இடம்பெற்று வருகின்றன.  அத்துடன்    நாடு முழுவதும்  சுயேட்சைக்குழுக்களின் சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களும் தேர்தலுக்கு  தயாராகி வருகின்றனர்.  அடுத்த பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல்  மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை கோரப்படவுள்ளன.  தேர்தலை  நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21