இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டிய அவசியமான சூழல் உருவாகி இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் டி பற்றாக்குறை, கால்சிய சத்து குறைபாடு, சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றுவது, உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பது என பல்வேறு காரணங்களை பட்டியலிடலாம். இன்றும் பெரும்பாலான முதியவர்கள் முழங்கால் மூட்டு வலி குறைய முறையான சிகிச்சை பெறாமல், தற்காலிக நிவாரணத்தை தான் பெற்று வருகிறார்கள்.
இதன் காரணமாகவும் அவர்களுக்கு மூட்டு மாற்று சத்திரசிகிச்சை அவசியமாகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வயதான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மேற்கொள்ளப்படும் முழங்கால் மூட்டு வலிக்குரிய சிகிச்சை பாதுகாப்பானதாக இருப்பதால், மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றினால் இத்தகைய பிரச்சனையில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.
டொக்டர் ராஜ்கண்ணா.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM