சீன ஜனாதிபதி ஜின்பிங்கின் மனைவி பெங் லியுவான் இலங்கையில் உள்ள பெண்கள் பாடசாலை மாணவர்கள் குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்து கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக மாணவர்கள் குழு கடந்த திங்களன்று ஓவியங்கள் சிலவற்றை வரைந்தும், கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தனர்.

இதற்கு பதிளிக்கும் முகமாக குறித்த மாணவர்களுக்கு சீன ஜனாதிபதியின் மனைவி நன்றி தெரிவித்து பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த ஓவியங்கள் சீன மக்களை கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டெழுவதற்கு ஊக்குவிக்கும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை மக்களின் நேர்மையான நட்பை நிரூபிக்கும் அன்பும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகள் சீனா - இலங்கைக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் தன்னிச்சயையாக சீனாவுக்கு ஆதரவும், தமது பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருவது வரவேற்றுள்ளதாக  குறிப்பிட்டுள்ள அவர் இது எமக்கு ஆறுதல் தரும் விடயமாகவும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.