வெளிநாட்டு தம்பதியினரை அச்சுறுத்திய விவகாரம் : விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

Published By: Vishnu

04 Mar, 2020 | 10:43 AM
image

இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது கடந்த 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியை பார்க்க சென்ற வெளிநாட்டு தம்பதியினர் இலங்கை அணிக் கொடியுடன் இலங்கை அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது அவர்களிடம் சென்ற ரசிகர் ஒருவர் குறித்த வெளிநாட்டுப் பெண், மேனியில் போர்த்தியிருந்த தேசியக் கொடியை அகற்றுமாறு அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந் நிலையில் இந்த சம்பவத்தை காணொளி மூலம் பதிவுசெய்த நபர் ஒருவர் அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். 

இந்த காணொளி தற்போது வைரலாகி வருவதுடன், பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டணத்தை தெரிவித்ததுடன், வெளிநாட்டு தம்பதியினரிடமும் மன்னிப்பு கோரியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர்.

இந் நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். 

அதற்கமைவாக தற்போது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19