பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 28 பேர் வரை பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

REUTERS

அந்நாட்டின் சாவோ பாலோ (São Paulo) மற்றும் ரியோ டி ஜெனிரோ ( Rio de Janeiro) ஆகிய மாநிலங்களின் கரையோரப்பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளத்தையடுத்து இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 23 பேர் உயிழந்துள்ளதுடன் , 30க்கும் மேற்பட்டோர் காணமால் போயுள்ளதகாவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை காணமால்போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளதோடு , இறப்பு எண்ணிகைகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டின் சாவோ பாலோ பகுதியிலேயே அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் குழந்தை மண்சரிவில் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் பணிகளை துரிதப் படுத்தியுள்ளனர்.

அத்தோடு வெள்ளம் மற்றும் அடை மழை , மண்சரிவினால் அதிகளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் , மக்களின் வீடுகளும் , வாகனங்களும் மண்சரிவில் சிக்கி சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் நிவாரண உதவிகளை வழங்கி வருவதோடு மேலும் குறித்த பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image : AFP / REUTERS