அமெரிக்காவில் சூறாவளி : இதுவரை 25 பேர் பலி!

Published By: R. Kalaichelvan

04 Mar, 2020 | 10:26 AM
image

அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் தலைநகர் நாஷ்விலியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக பல பெறுமதிவாய்ந்த உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 25 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

குறித்த சூறாவளியால் அம்மாநிலத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிஸ் மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது. 

அதிவேகத்தில் வீசிய சுழல் காற்றுடன் கூடிய சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின் கூரைகள் முழுவதும் சூறாவளியில் சிக்கி பறந்தன. 

மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. 

பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.  வீதிகளில் நின்ற வாகனங்கள் மற்றும் விமானங்களும் சூறாவளியின் பிடியில் இருந்து தப்பவில்லை. வீதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் கவிழ்ந்து கிடந்தன.

சூறாவளியில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 25 பேர் பலியாகியுள்ளனர்.  சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், அவர்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47