தன்னை கைது செய்வதை தடுப்பதற்காக, பிவிதுறு ஹெல உறுமயவின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு எதிர்வரும் 23 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனுவினை கடந்த ஜீன் 9 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

போலி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு பங்குகளை விற்பனை செய்த குற்றம் தொடர்பில், பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் போது தன்னை கைது செய்வதை தடுப்பதற்காகவே குறித்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.