நடிகை ரெஜினா கசாண்ட்ரா கதையின் நாயகியாக நடிக்கும் ‘சூர்ப்பனகை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா கஸன்ட்ரா. இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இவருடைய தயாரிப்பில் முதல் படைப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாராகும் திரைப்படம் ‘சூர்ப்பனகை’. புராண கதையை மையப்படுத்திய இந்த திரைக்கதையில் சூர்ப்பனகையாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க, அவருடன் அக்ஷரா கவுடா, சதீஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பி கே வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் கார்த்திக் ராஜு. இவர் ஏற்கனவே திருடன் பொலிஸ், உள்குத்து, கண்ணாடி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
சூர்ப்பனகை என்ற புராண கதாபாத்திரத்தின் வேறு கோணத்தில் வெளிப்படுத்தும் திரைக்கதை என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த டிஜிட்டல் யுக சூர்ப்பனகை ஏற்படுத்தியிருக்கிறார். ரெஜினாவின் ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM