(ரொபட் அன்டனி)

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். 

குறிப்பாக இது தொடர்பில் பல்வேறு பொது அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவருறது. 

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொருளாதார கொள்கைகளை அர்ஜுன மகேந்திரன் நன்றாக அறிந்து வைத்துள்ளார் எனவும் எனவே அவரையே மத்திய வங்கியின் ஆளுநராக தொடர வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். 

எனினும் பிரதமரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி எவ்வாறான பதிலை வழங்கினார் என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.