வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இரு யுவதிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திஸாநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்று மாலை வவுனியாவில் அடைவு வைக்கும் இடத்தில் அடைவு வைப்பதற்காக நகைகளுடன் சென்ற 23, 26 வயதுடைய இரு யுவதிகளை காப்பு, கைச்சங்கிலி, மோதிரம் என்பவற்றோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.