அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள கூகுள் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும் தங்களது வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுக்குமாறு கூகுள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியதையடுத்து, கொரோனா தொடர்பான அச்சம் காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய சோதனைகளில் அவரிடம் கொரோனாவுக்கு சாதகமான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக டப்ளினில் உள்ள எங்களது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

கூகுளின் டப்ளின் அலுவலகத்தில் 8,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Photo credit : ‍CNN