சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 08:00 PM
image

பற்றாக்குறைக்கு இடம் வைக்காது எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தினை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எதிர்வரும் சில தினங்களில் உர தொகுதி நாட்டை வந்தடைய உள்ளது. தாமதமின்றி உரத்தினை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உர இறக்குமதியின்போது எழும் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. விநியோகிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் நியமங்களை பரீசீலனை செய்யும் அறிக்கையை 10 தினங்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயிகள் அதிக அறுவடையை எதிர்பார்த்து அதிகளவு உரத்தினை பயன்படுத்துகின்றனர். 

இரசாயன உரங்களை பயன்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவசாய சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, படிப்படியாக கூட்டுரத்திற்கு அவர்களை மாற்ற வேண்டியது பற்றியும் விளக்கினார்.

 அதற்காக விவசாயிகளை தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கூட்டுரத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் தொடர்பில் மக்கள் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சந்தையில் உள்ள தேவை மற்றும் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைக்கு கூட்டு உர உற்பத்திகளை அதிகரிப்பதனை காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் நியமங்களுக்கேற்ப உரத்தினை உற்பத்தி செய்யும் நாடுகளை இனங்கண்டு உரம் இறக்குமதி செய்யப்பட வேண்டும். நெற் பயிர்ச்செய்கை உட்பட வருடாந்தம் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் அவற்றின் அளவுகளை சரியாக அறிந்து தேவையானளவு உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல, மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன, பெருந்தோட்ட ஏற்றுமதி விவசாய அமைச்சின் செயலாளர் ரவீந்ர ஹேவாவித்தாரன, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எச்.ஏ.கருணாரத்ன ஆகியோரும் விவசாயத் திணைக்களம், கட்டளைகள் நிறுவனம், இலங்கை உரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதியாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24