திருடும் நோக்கில் வீடொன்­றுக்குள் புகுந்த திருடன் தான் எதிர்­பார்த்த பணமோ நகையோ அங்கு கிடைக்­கா­மையை அடுத்து அவ்­வீட்டில் சமைத்து வைத்­தி­ருந்த உண­வு­களை உட்­கொண்­டு­விட்டு, மற­தி­யாக தான் கொண்­டு­வந்த வாள், கத்­தி­யினை வைத்­து ­விட்டு பிறி­தொரு கத்­தி­யினை எடுத்­துச்­சென்ற சம்­ப­வ­மொன்று கம்­பளை அட்­ட­பாகை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கம்­பளை அட்­ட­பாகை தோட்­டத்தில் அண்­மைக்­கா­ல­மாக திரு­டர்­களின் தொல்­லைகள் அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தோடு இவர்­களால் பாலியல் வல்­லு­றவு முயற்­சி­க ளும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­நி­லையில் கடந்த 3ஆம் திகதி அட்­ட ­பாகை தோட்ட எல்­லையில் அமைந்­துள்ள பெரும்­பான்மைச் சமூ­கத்­தினர் வாழும் கிரா­மத்­திற்குள் புகுந்த திரு­ட­னொ­ருவன் முத லில் சிறு­கைத்­தொழில் முயற்­சி­யா­ளரின் வீட்­டுக்குள் நுழைந்து அங்­கி­ருந்த 1400 ரூபா பணத்­தினை கொள்­ளை­யிட்­டுக்­கொண்டு, அப்­ப­டியே அயல்­வீட்­டுக்­கூ­ரையி­னூ­டாக அந்த வீட்­டுக்குள் புகுந்து, அங்கு எல்லா இடங்­களில் தேடியும் தான் எதிர்­பார்த்த பணமோ நகையோ கிடைக்­காமல் போகவே அந்த வீட்டு சமை­ய­ல­றையில் சமைத்து வைத்­தி­ருந்த பலாக்காய் கறி­யி­னையும் சோற்­றி­னையும் சாப்­பிட்­டு­விட்டு அடுப்பு கரி­யி­னைக்­கொண்டு நன்றி என்ற வாச­கத்­தி­னையும் எழுதி வைத்து விட்டு மற­தி­யாக தான் கொண்­டு­வந்த வாள் மற்றும் கத்­தி­யினை வைத்­து­விட்டு அந்த சமை­ய­ல­றையில் வைக்கப்பட்டிருந்த பிறிதொரு கத்தியினை எடுத்து சென்றுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பான முறைப்பாடு கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய் யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.