திலக்மாரப்­பன அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தது இலங்கை அர­சியல் வர­லாற்றில் சிறந்த முன்­னு­தா­ர­ண­மாகும். இந்த புதிய அர­சியல் கலா­சாரம் தொட­ர­வேண்டும் எனத் தெரி­வித்த அமைச்சர் மஹிந்த அம­ர­வீர ‘எவன்கார்ட்’ பிரச்­சினை தொடர்பில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நாட்டில் இன்று நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் எவன் கார்ட் மிதக்கும் ஆயு­தக்­கப்பல் தொடர்­பான விசா­ர­ணை இடம்­பெ­று­கி­றது. இவ்­வி­டயம் தொடர்பில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சராக இருந்த திலக்மாரப்­பன பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­துக்கள் நாட்டில் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கின.
இந்­நி­லையில் திலக்மாரப்­பன அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.
இது இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் சிறப்­பான முன்­னு­தா­ர­ண­மாகும். இந்த புதிய அர­சியல் கலா­சாரம் தொடர வேண்டும். அதே­வேளை எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பான விசா­ர­ணை­களை ஜனா­தி­பதி பொறுப்­பேற்­றுள்ளார். இது வர­வேற்­புக்­கு­ரிய விட­ய­மாகும்.
இவ்­வி­டயம் தொடர்­பாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இதில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருப்பின் அதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட வேண்டும்.
அவ்­வா­றா­ன­வர்கள் நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்டு தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும்.
அத்­தோடு எவன்கார்ட் பிரச்­சினை எந்த விதமான சட்டவிரோதமான நடவடிக்கை யும் இல்லையென்பது விசாரணையில் தெளிவானால் அதனை நாட்டுக்கு அறி விக்க வேண்டும் என்றார்.