10 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் மற்றுமொரு மாணவனை மின்னேரியா பொலிஸார்  நேற்று கைது செய்துள்ளனர்.

15 வயதுடைய குறித்த மாணவன் மாணவி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். 

துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய மாணவியை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.