மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம் ரூபா சம்பளம் அமுலாகும் என்று அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறி வந்தாலும் அம்மாதத்திற்குரிய சம்பளம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தொழிற்சங்கங்கள் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை பேச்சுக்கள் நடத்தலாம். ஆனால் இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதால் அதற்கு அடுத்த கட்டம் என்னவாகும் என்பது தான் அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசாங்கம்,தொழிற்சங்கங்கள், கம்பனிகள் என முத்தரப்பிலிருந்தும் சம்பள விடயத்தில் ஏமாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர் தோட்டத்தொழிலாளர்கள். கம்பனிகள் முன்வைத்த சில கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாலேயே முத்தரப்பு ஒப்பந்தம் தாமதமாகியுள்ளது. எனினும் இங்கு ஒரு விடயத்தை பலரும் புரிந்து கொள்ளல் அவசியம். மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம் ரூபா சம்பளம் அமுலாகும் என்று அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறி வந்தாலும் அம்மாதத்திற்குரிய சம்பளம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே தொழிற்சங்கங்கள் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை பேச்சுக்கள் நடத்தலாம். ஆனால் இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதால் அதற்கு அடுத்த கட்டம் என்னவாகும் என்பது தான் அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் திணைக்களம் அறிவித்து விடும். அநேகமாக ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் முனைப்பில் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா விவகாரத்தைப்பற்றி எவருமே கணக்கிலெடுக்கப்போவதில்லை. ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஆயிரம் ரூபா இருந்தது போன்று, பொதுத்தேர்தல் வாக்குறுதியாகவும் இது மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் காலம் வரை இந்த விவகாரம் நீடிக்கப்பட்டதா என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழுவதில் நியாயம் உள்ளது.
இந்நிலையில் கம்பனிகள் ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்குவதற்கு முன்வந்தாலும் சில கோரிக்கைகளை தற்போது வலியுறுத்தி வருவதாகத் தெரிகின்றது.
அதில் பிரதானமான இரு விடயங்கள் அடங்குகின்றன.
1) பெண்கள் நாளாந்தம் 20 கிலோ வரை கொழுந்து பறித்தல் வேண்டும்
2) ஆண்களின் வேலை நேரம் 8 மணித்தியாலமாக இருத்தல் அவசியம்
மேற்குறிப்பிட்ட இரு விடயங்களை முன்னிலைப்படுத்தி தமது கோரிக்கைகளை கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதில் இரண்டாவது விடயம் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் தற்போது பெருந்தோட்டப்பகுதிகளில் அதிக நேரம் உழைப்பவர்களாக பெண்களே விளங்குகின்றனர். அவர்கள் இல்லையென்றால் தேயிலை தொழிற்துறையே இல்லை என்று கூறுமளவிற்கு அவர்களின் பங்களிப்புகள் உள்ளன. ஆண் தொழிலாளர்களோ தமக்கு விதிக்கப்பட்ட பணியை (norm) கால நேரத்திற்குள் முடித்து விட்டு வீடு திரும்பி விடுவர் அல்லது வேறு வேலைகளுக்குச் சென்று விடுவர். ஆகவே ஆண் தொழிலாளர்களிடமிருந்து அதிக உற்பத்தியை கம்பனிகள் எதிர்பார்ப்பது நியாயமாகவுள்ளதாக சில தொழிற்சங்க தரப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பெண் தொழிலாளர்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தற்போதைய சூழ்நிலையில் நியாயப்படுத்த முடியாததாகவுள்ளன. கம்பனிகள் பெருந்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து 27 வருடங்களாகின்றன. சில கம்பனிகள் தோட்டங்களின் சிறப்பான நிர்வாகத்தால் தேயிலை மீள் பயிரிடுதல், தரிசு நிலங்களை உற்பத்திக்காக பயன்படுத்துல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பல தோட்டங்களில் தேயிலை மலைகள் காடுகளாகி உள்ளன. பழைய தேயிலை மலைகளிலேயே இன்னும் தேயிலை பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தற்போது நாளாந்தம் 18 கிலோ தேயிலையையே பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி பறித்தாலும் தேயிலை இல்லை என்ற காரணத்தை கூறி தோட்ட நிர்வாகங்கள் வேலை நாட்களை குறைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்தை எங்ஙனம் பறிப்பது?
உற்பத்தி அதிகரிப்பு முறையிலான சம்பளத்திட்டத்தை முன்வைத்திருக்கின்றோம் என கம்பனிகள் தெரிவித்தாலும் தமது காலத்தில் மீள் பயிர்ச்செய்கைகளை இவை ஊக்குவிக்கவில்லை. அதாவது உற்பத்தி அதிகரிப்புக்கான எந்த வழிவகைகளையும் தோட்ட நிர்வாகங்கள் அறிமுகப்படுத்தவில்லை. அதே வேளை கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு கோரிக்கைகளை முன் வைத்தால் அதை நிறைவேற்றுவதில் தொழிற்சங்கங்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன.
ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாவை எப்படியாவது பெற்றுத்தருகிறோம் என்றே தொழிற்சங்கங்கள் கூறின. மேலதிகமாக தொழிலாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் எந்த விடயங்கள் பற்றியும் பேசப்படவில்லை. அதேவேளை எதிர்தரப்பு தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு எந்த நிபந்தனைகளையும் விதிக்காது ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தைப் பெற்றுத்தந்தால் வரவேற்போம் என்று தெரிவித்திருந்தன.
தற்போது கம்பனிகள் எதிர்பார்க்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் தான் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்றால் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கு தேர்தல் காலத்தில் அது பாதகமான விடயமாக அமையலாம். அதேவேளை இந்த விவகாரத்தை எதிர்தரப்பு தொழிற்சங்கங்கள் தேர்தல் காலத்தில் தமது பிரசார பரப்புரையாக்கிக்கொள்ளலாம்.
எனவே தற்போது கூட்டு ஒப்பந்த அமைப்புகளில் அரசாங்கம் பக்கமிருக்கும் இ.தொ.காவுக்கு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. கம்பனிகள் மற்றும் தொழிலாளர்கள் இருசாராருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்குப்பின்னர் புதிய திட்டம்
கூட்டு ஒப்பந்தத்தின் படி தமக்கு ஆயிரம் ரூபா வழங்க முடியாது என கம்பனிகள் 2015 இலிருந்து கூறி வருகின்றன. ஆனாலும் அந்த முறையிலேயே தங்கியிருக்க தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன. கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியே வந்தால் ஆயிரம் ரூபாவை விட அதிகமாக தொழிலாளர்களால் ஊதியத்தை பெற முடியும் என கம்பனிகள் கூறுவதில் உண்மையில்லாமலில்லை.
ஆனால் அதற்குப்பிறகு தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான நெருக்கம் குறையும் அபாயமுள்ளது. தற்போதும் நெருக்கம் அதிகமாகவுள்ளது என்று கூற முடியாது.
எனினும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் தமக்கூடாகவே கிடைக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன.
எனினும் பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின்னர் புதிய சம்பளத்திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது. அதன் காரணமாகவே அரசாங்கமானது தேசிய சம்பளக் கொள்கையொன்றை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கும் உதவுவதற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அரச மற்றும் தனியார் துறைகளின் சம்பளங்கள் மற்றும் வேதனங்களின் பேண்தகைமையை தொடர்ச்சியாக பேணுவதற்காக அத்துறைகளின் சம்பளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊதிய கட்டமைப்புக்களையும் மீளாய்வு செய்து, அரச துறையிலும் தனியார் துறையிலும் தொழிற்படை தேவைக்கேற்ப இதனை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
இலங்கையைப்பொறுத்தவரை பெருந்தோட்டத்தொழிலாளர்களை எந்த பிரிவுக்குள் அடக்குவது என்பது இது நாள் வரை அரசாங்கங்களுக்கு குழப்பமாகவே இருந்துள்ளது. தனியார் கம்பனிகளின் கீழ் தோட்டங்கள் இருந்தாலும் அவர்களின் சம்பளத்திட்டம் கூட்டு ஒப்பந்தம் என்ற பொறிக்குள் மாட்டியிருப்பதால் தனியார் துறையினருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே இவர்கள் வேதன விடயத்தில் புறந்தள்ளப்பட்டு வருகின்றனர். தனியார் துறையினருக்கு வழங்கப்படும் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்திட்டம் கூட இல்லாது தனியார் துறை பிரிவுக்குள் பணி புரியும் ஒரே வர்க்கத்தினராக இவர்கள் விளங்குகின்றனர்.
எது எப்படியானாலும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியே தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா படி சம்பளம் கிடைக்கும் என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பதாக இம்மாதத்தில் அது உறுதி செய்யப்படல் அவசியம். அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- சிவலிங்கம் சிவகுமாரன் -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM