அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல் மார்க்க ஒருங்கிணைந்த பாதுகாப்பின் மற்றுமொரு அம்சமாக, அவுஸ்திரேலிய அரச கடற்படையின் HMAS Parramatta பாதுகாப்புக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
நான்கு மாதகால பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கப்பல், தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய வலயத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கிறது. அதன் கொழும்பு வருகை மூலம், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக் கடறப்டையினருக்கிடையில், தொழில் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொளள்வும், தொழில்நுட்ப மற்றும் சமூக மட்டத்திலான கலந்துரையாடல்களை ஏற்படுத்திக் கொளள்வும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
HMAS Parramatta அவுஸ்திரேலிய கடறப் டையின் 2020 ஆம் ஆண்டுகான முதலாவது ரோந்துக் கப்பலாகும். இது கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்து - பசுபிக் நடவடிக்கைகளின் வெற்றியைக் குறிக்கும் முகமாகவே செயற்படுத்திக் கொள்ளப்பட்டது. இது, இலங்கையுடனான அவுஸ்திரேலியாவின் சிறந்த ஒருங்கிணைப்பை நன்கு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்து சமுத்திரமானது சுதந்திரமான மற்றும் அனைவருக்கும் சிறந்த சட்டங்களுக்கு அமைய செயற்பட்டு வரும் ஒரு பிரதேசமாக தொடர்ந்தும் செயற்படுவதை இந்து - பசுபிக் நாடுகளான அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகியன இணைந்து உறுதிப்படுத்துகின்றன.
இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் கௌரவ டேவிட் ஹொலி, ‘இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஒரே தொலைநோக்கைப் பகிர்ந்து கொண்டு, சட்டங்களுக்கு மதிப்பளித்து, பொருளாதார ரீதியில் தெளிவான, நிலையான தன்மையையும், இந்து சமுத்திரத்தில் தங்களுக்கிடையில் மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொள்ளும் நாடுகளாகும். இலங்கை, அவுஸ்திரேலியாவின் ஒரு முன்னணி பங்காளி நாடாகச் செயற்படுவதற்குக் காரணம், இந்த இரு நாடுகளும் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்படுவதும், எந்தவிதமான முறையற்ற வர்த்தகங்களையும் விரும்பாமல் இருப்பதாகும். எமது இணைப்பின் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆடக்டத்தல் மேற்கொள்வதை தடுப்பதிலும் நாம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளோம்’ என்று கூறினார்.
HMAS Parramatta வின் 200 அதிகாரிகள் உட்பட கடற்படை உத்தியோகத்தர்கள் மார்ச் 07 ஆந் திகதி கொழும்பை வந்தடைய இருக்கின்றனர். அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை கடற்படையினர் பல்வேறு ரீதியில் இணைந்து செயற்பட இருக்கின்றனர்.
இந்தக் கப்பலில் நிறுத்தப்படும் ஹெலிகொப்டர்களின் செயற்பாடுகள், படகுகளை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் தேடுதல் பணிகள், பொறியியல் மற்றும் கடல் ரோந்து நடவடிக்கைகள் என்பன பற்றி இங்கு தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட இருக்கின்றன. மார்ச் 11 ஆம் திகதி புறப்பட இருக்கும் HMAS Parramatta இலங்கையின் கடற்படைப் படகுகள் இணைந்த பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கிறது.
HMAS Parramatta இலங்கைக்கு வருகையை அடுத்து இந்தியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிஙக்ப்பூர், தாய்லாந்து மறறு;ம் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM