மாத்தளை நாவுல பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 8 மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணமல் போயுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி குறித்த இருவரும் காணமல் போயுள்ள நிலையில் 15 ஆம்  திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.