இராணுவ மயமாக்கப்படும் நாடு

Published By: J.G.Stephan

03 Mar, 2020 | 03:19 PM
image

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்று, கடந்த 25ஆம் திக­தி­யுடன் 100 நாட்கள் நிறை­வுக்கு வந்த நிலையில், அவ­ரது 100 நாள் செயற்­பா­டுகள் குறித்த அறிக்கை ஒன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தின் ஊடகப் பிரி­வினால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்த அறிக்­கையில், ஒன்­பது மாகா­ணங்­க­ளிலும், பாது­காப்புத் தொடர்­பான விசேட பொறுப்பை இரா­ணு­வத்­துக்கு வழங்கும் வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டதும் ஒரு சாத­னை­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் இருந்து, பொது பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் கீழ் இரா­ணு­வத்­தி­னரை பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு அனு­மதி அளிக்கும் வகையில் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்டு வரு­கி­றது.

ஒரு மாதமே செல்­லு­ப­டி­யாகக் கூடிய இந்த உத்­த­ரவை தற்­போ­தைய அர­சாங்­கமும், புதுப்­பித்து வரு­கி­றது. இதனை ஒரு சாத­னை­யாக குறிப்­பிட்­டி­ருக்­கின்ற அர­சாங்கம், சிவில் நிர்­வாகப் பணி­களில் இரா­ணு­வத்­தி­னரின் தலை­யீட்­டுக்கு அதிக இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்து வேறெந்த விட­யத்­தையும் குறிப்­பி­ட­வில்லை.ஜனா­தி­பதி செய­ல­கத்தின் அறிக்கை வெளி­யி­டப்­பட்ட நாளன்று, கொழும்பு நகர வீதி­களில் போக்­கு­வ­ரத்தை இல­கு­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் இரா­ணுவப் பொலி­ஸாரை ஈடு­ப­டுத்தும் திட்டம் செயற்­பாட்­டுக்கு வந்­தது.  அடுத்­த­டுத்த நாட்­க­ளி­லேயே விமா­னப்­படை மற்றும் கடற்­ப­டை­யி­னரும், வீதி போக்­கு­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்தும் பணிக்கு அமர்த்­தப்­பட்­டனர்.

காலை 6 மணி தொடக்கம், 10 மணி வரை­யிலும், மாலையில் 4 மணி தொடக்கம் 7 மணி வரை­யிலும், கொழும்பு நகர வீதி­களில், இரா­ணுவப் பொலிஸார் போக்­கு­வ­ரத்து கண்­கா­ணிப்பு பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். வாகன ரோந்துப் பணி­க­ளிலும் அவர்கள் ஈடு­ப­டு­கின்­றனர். இந்தச் செயற்­திட்­டத்தின் மூலம் கொழும்பு நகர வீதி­களில் ஆயுதம் தரிக்­காத இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்னம் மீண்டும் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

கொழும்பு நகரம், காலை­யிலும் மாலை­யிலும் போக்­கு­வ­ரத்து நெரி­சலால் திணறிக் கொண்­டி­ருப்­பது அனை­வரும் அறிந்த விடயம் தான். அதி­க­ரித்து வரும் வாகன நெரி­சலும், சனத்­தொ­கையும் மாத்­தி­ர­மன்றி, தலை­ந­கரை நோக்கிக் குவிந்து வரும் மக்­களின் இடப்­பெ­யர்வும் கூட, இதற்கு முக்­கிய கார­ணங்களாகும்.

இந்தப் போக்­கு­வ­ரத்து நெரி­சலைக் குறைத்து, இல­கு­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் போக்­கு­வ­ரத்தை ஒழுங்­கு­ப­டுத்­த­வ­தற்­கான திட்­டங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கும், அமெ­ரிக்கா எம்.சி.சி கொடையின் மூலம், உதவ முன்­வந்­தி­ருந்­தது.அந்த எம்.சி.சி கொடையை பெற்றுக் கொள்ள தற்­போ­தைய அர­சாங்கம் மறுத்து வரு­கி­றது. நாட்டின் இறைமை, சுதந்­தி­ரத்­துக்கு ஆபத்து என்று கூறி, சிங்­கள மக்­களைத் திருப்­திப்­ப­டுத்தும் கருத்­துக்­களை வெளி­யிட்டு அமெ­ரிக்­கா­வுடன் உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட மறுத்து வரும் அர­சாங்கம், போக்­கு­வ­ரத்தை சீர்­ப­டுத்தும் திட்­டத்தில் இரா­ணு­வத்­தி­னரைக் கள­மி­றக்­கி­யி­ருக்­கி­றது.

கொழும்பின் போக்­கு­வ­ரத்து நெரிசல், கொழும்பு வாழ் மக்­க­ளுக்கும், அன்­றாடத் தேவை­களின் நிமித்தம் கொழும்பு வரும் மக்­க­ளுக்கும், பெரும் இடர்ப்­பா­டா­கவே இருந்து வரு­கி­றது. இந்தப் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காண அர­சாங்­கத்­துக்கு வழி­யில்­லாத நிலையில், படை­யினர் மூலம், போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­ப­டுத்­தலை மேற்­கொள்ள முடிவு செய்­துள்­ளது.

போக்­கு­வ­ரத்து பொலிஸார் செய்ய வேண்­டிய வேலை இது­வாக இருந்­தாலும், கொழும்பு நகரில் போக்­கு­வ­ரத்தை இல­கு­ப­டுத்தும் வேலைத் திட்­டத்­துக்கு தேவை­யா­ன­ளவு பொலிஸார் போதாக்­கு­றை­யாக இருக்கக் கூடும். இந்த விட­யத்தில், பொலி­ஸாரின் கோரிக்­கைக்­க­மைய, இரா­ணுவப் பொலிஸார் பணியில் அமர்த்­தப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. 

பொது­மக்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்­துக்கு அமைய, இரா­ணு­வத்­தி­னரை பாது­காப்பில் ஈடு­ப­டுத்த முடியும். அதற்­கான அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கி­றது. ஆனாலும், பொலிஸ் தரப்பின் கோரிக்­கைக்கு அமை­வாக  இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் ஆலோ­ச­னையின் பேரில், இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவின் வழி­காட்­ட­லுக்கு அமை­யவே, இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தா­கவே செய்தி அறிக்­கை­களில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

பொலி­ஸாரின் மூலமும், ஏனைய சிவில் அதி­கா­ரி­களின் மூலமும் தீர்க்­கப்­பட வேண்­டிய காரி­யங்­களை, இரா­ணு­வத்­தி­னரைக் கொண்டு கையா­ளு­கின்ற போக்கு தற்­போ­தைய அர­சாங்­கத்தில் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. எல்லா மட்­டங்­க­ளிலும், இரா­ணு­வத்­தி­னரின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த வாரம், யாழ்ப்­பா­ணத்தில் ஆயு­தங்­க­ளுடன் இளை­ஞர்கள் ஒன்று கூடு­வ­தாக கிடைத்த தகவல் ஒன்றின் பேரில், விடுதி ஒன்­றுக்குள் நுழைந்து தேடுதல் நடத்­திய  இரா­ணு­வத்­தினர் 41 இளை­ஞர்­களை கைது செய்­தி­ருந்­தனர்.  இது­போன்ற போக்கு, வடக்கில் அதி­க­ரித்து வரு­கி­றது.  வடக்கில் இருந்து தென்­ப­கு­திக்கு செல்லும் வாக­னங்கள் அண்­மைக்­கா­ல­மாக சோத­னை­யி­டப்­பட்டு வரு­கின்­றன. தெற்கில் இவ்­வா­றான சோத­னைகள் இடம்­பெ­று­வ­தில்லை. 

வடக்­கி­லுள்ள மக்கள் இரா­ணுவ சோத­னைக்குப் பழக்­கப்­பட்­ட­வர்கள் என்­பதால், இதனை ஒரு பெரிய விட­ய­மாக அவர்­களும் எடுத்துக் கொள்­ள­வில்லை, தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்று கூறு­வோரும் கண்டு கொள்­ள­வில்லை. வெறும் எதிர்ப்பு, அறிக்கை, கண்­ட­னங்­க­ளுடன் அவர்­களின் காரியம் முடிந்து போன­தா­கவே கரு­து­கின்­றனர். 

கஞ்சா கடத்­தலை தடுப்­ப­தற்­காக என்­றொரு கார­ணத்தை முன்­வைத்து, இந்த சோதனைச் சாவ­டிகள் நியா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அர­சி­யல்­வா­திகள், அதி­கா­ரிகள் தமது பதவி நிலை செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி, சோதனைச் சாவ­டி­களில் இறங்கி நடக்­காமல் தப்பி விடு­கின்­றனர். சாதா­ரண மக்கள் தான் அவ­திக்­குள்­ளா­கின்­றனர். 

கஞ்சா என்­பது வடக்­கிற்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளது. இதனைக் காரணம் காட்­டினால் யாரும் வாயைத் திறக்க முடி­யாது என்­பது அர­சாங்­கத்­துக்கும் படைத்­த­ரப்­புக்கும் நன்­றா­கவே தெரியும்.

எனவே, இந்தச் சந்­தர்ப்­பத்தை சாட்­டாக வைத்துக் கொண்டு வாழைப் ப­ழத்தில் ஊசி ஏற்­று­வது போல, வடக்கில் மீண்டும் சோதனைச் சாவ­டி­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம். அது­போ­லவே கொழும்­பி­லுள்ள மக்­க­ளுக்கு, போக்­கு­வ­ரத்து நெரிசல் ஒரு பெரும் தலை­வ­லி­யான விடயம். அதனை தீர்ப்­பது என்றால், அவர்கள் எதற்கும் கைதூக்கத் தயா­ராக இருப்­பார்கள். அந்தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி, அர­சாங்கம் கொழும்பில் இரா­ணு­வத்­தி­னரை பணியில் ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தேசிய பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை கொடுப்­பது என்­பது அர­சாங்­கத்தின் பிர­தான கொள்கைத் திட்­ட­மாக இருக்­கலாம். ஆனால், அர­சாங்­கத்தின் தற்­போ­தைய போக்கு நாட்டை இரா­ணுவ மயப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது. முக்­கி­ய­மான அரச பத­வி­களில் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் பணியில் அமர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன, மேஜர் ஜெனரல் நந்­த­மல்­ல­வ­ராச்சி, மேஜர் ஜெனரல் கே.பி.எகொ­ட­வெல, மேஜர் ஜெனரல் விஜித ரவிப்­பி­ரிய, மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி, ஜெனரல் தயா ரத்­நா­யக்க, அட்­மிரல் ஜெயநாத் கொலம்­பகே உள்­ளிட்ட பல முன்னாள் இரா­ணுவ , கடற்­படை அதி­கா­ரிகள் சிவில் நிர்­வாக கட்­ட­மைப்­பு­களில் முக்­கிய பத­வி­களில் அமர்த்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 

இது இரா­ணுவ ஆட்சி நடக்­கின்ற ஒரு நாட்டைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கவே இருக்­கின்ற நிலையில் தான், போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­ப­டுத்­த­லிலும் இரா­ணு­வத்தை ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது அரசாங்கம். இது நாடு இராணுவ மயப்படும் நிலையை நோக்கி நகர்வதையே வெளிப்படுத்தியிருக்கிறது.  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கூட இந்த நிலை குறித்து கவலை வெளியிட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் கீழ் மக்களின் செயற்பாடுகளை நகர்த்துகின்ற இலங்கை அரசாங்கத்தின் சமீபத்திய போக்கு குறித்து கவலையடைவதாக அவர், பேரவையில் கூறியுள்ளார்.

நாட்டை இராணுவமயப்படுத்தும் இந்தப் போக்கு நாட்டு மக்களால் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்பது பற்றியோ, சர்வதேச சமூகத்தினால் எவ்வாறு பார்க்கப்படும் என்பது பற்றியோ அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. இராணுவப் பின்னணி கொண்ட ஜனாதிபதியின் தலைமையில் உள்ள ஒரு அரசாங்கத்தில், இதுபோன்ற செயற்பாடுகள் ஆச்சரியமல்ல என்பது  இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

சுபத்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00