நடிகர் ஜக்கிசான் தனக்கு கொரோனா வைரஸ் என பரவும் வதந்திகளை நிராகரித்துள்ளதுடன் தான்  ஆரோக்கியமாக சிறந்த  உடல்நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிசான் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள்  வெளியானதால் அவரது ரசிகர்கள் கலக்கமடைந்துள்ள நிலையிலேயே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிசான் நான் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன் என  செய்திகள் பரவி வருவதாக எனது பணியாளர்கள் என்னிடம் தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனது உடல்நிலை குறித்து கரிசனை வெளியிட்ட அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ள ஐக்கிசான் சிறந்த உடல்நிலையுடன் பாதுகாப்பாக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோன வைரசிற்காக என்னை தனிமைப்படுத்தவில்லை,எனவும் குறிப்பிட்டுள்ள ஐக்கிசான் எனது உடல்நிலை குறித்து பல நண்பர்கள் விசாரித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது ரசிகர்கள் தனக்கு வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்கான முகக்கவசங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான தருணத்தில் உலகம் முழுவதும் உள்ள எனது இரசிகர்களிடமிருந்து எனக்கு விசேட பரிசுப்பொருட்கள் கிடைத்துள்ளன முகக்கவசங்களிற்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

உங்களின் அன்பிற்குரிய பொருட்களை அவை தேவைப்படுபவர்களிற்கு வழங்குமாறு எனது பணியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளேன் என ஜக்கிசான் தெரிவித்துள்ளார்.