இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ,வொல்பச்சியா" பக்டீரியாக்களைக் கொண்டுள்ள கொசுக்களைப் பயன்படுத்தும் பரீட்சார்த்த முறை நேற்று ஆரம்பமாகியது.
நுகேகொடை, ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்தப் பரீட்சார்த்த திட்டம் முதலில் நுகேகொடை, மட்டக்குளி மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதன் பின்னரே ஏனைய இடங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. "வொல்பச்சியா" திட்டம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்துள்ளது.
பரீட்சார்த்தத் திட்ட ஆரம்பத்தின்போது உரையாற்றிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொல்பி, சுகாதார அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தில் பங்குபற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"வொல் பச்சியா' முறை 2011 இல் அவுஸ்திரேலியாவின் கெயார்ன்ஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு இம்முறை பெரும் வெற்றியளித்துள்ளது. அதன் பின் இங்கு டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
இதேநேரம், 1980 களில் இருந்து டெங்கு நோய் இலங்கையில் தீவிரமாகப் பரவி வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையில் டெங்குவின் தீவிரம் அதிகரிப்பதாகவும், எனினும் மரண விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM