கொரோனா வைரானது, நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தை 'ஹேவைர்' பலவீனப்படுத்துவதுடன் நுரையீரலையும் சிறுநீரகங்களையும் பாதிக்குமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வைரஸ் அநேகமானவர்களுக்கு கொடிய நிமோனியாவை ஏற்படுத்தும் எனவும் அறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சுவாச நோய்த்தொற்று என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது நுரையீரல் மற்றும் சுவாச பாதைகளை பாதிக்கிறது. இத்தொற்று ஏற்படும் போது இருமல், சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
ஒருவரின் நுரையீரலுக்குள் புகும் கொரோனா வைரஸ் நுரையீரல் கலங்களுடன் இணைத்து இனப்பெருக்கம் செய்வதன் மூலம் பல மடங்காக பெருகும் அதேவேளை, நுரையீரல் கலங்களை (செல்) கொல்கிறது என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதன் செயற்பாட்டை விளக்கியுள்ளர்.
மனித நுரையீரலினுள் புகும் கொரோனா வைரஸால் நுரையீரலின், கோப்னா மற்றும் சிலியேட் கலங்களை அதிகம் பாதிப்பதாக லண்டன், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளரும் பேராசிரியருமான ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுரையீரலின் உட்புறத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும், தூசி அல்லது பக்றீரியா போன்றவற்றறை அகற்றுவதிலும் இக்கலங்கள் பிரதானமாக செயற்படுகின்றன.
வைரஸ் இந்த கலங்களைப் பாதித்து அவற்றைக் கொல்லத் தொடங்குகிறது. இதன் மூலம் வைரஸ் பலமடங்காக பெருகுகின்றது. மேலும் நுரையீரல் அடைப்புகளை ஏற்படுத்த தொடங்குகிறது.
வைரஸ்கள் மற்றும் இறந்த கலங்கள் நுரையீரலின் சில பகுதிகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் நுரையீரல் வீக்கமடைந்து, சுவாசத்தைத் தடுக்கக்கூடிய திரவத்தை உற்பத்தி செய்கின்றது. இது நிமோனியாவைத் தூண்டுவதாக விஞ்ஞானிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சேதமடைந்துள்ளன என்பதற்கான அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் வைரஸ் அதை சேதப்படுத்தியது என்பதற்கு சிறிய ஆதாரங்கள் கூட கண்டரியப்படவில்லை.
எனினும் நுரையீரல் பாதிப்படையும் போது உடல் வழியாகச் செல்லும் ஒட்சிசனின் அளவு குறைகின்றது. இதன் காரணமாக உடல் உறுப்புகளுக்கு செல்லும் ஒட்சிசனின் அளவும் குறைகின்றது. இது ஒரு தீவிர சுகாதார அவசரநிலை. இந்நிலைமை விரைவாக சரிசெய்யப்படாவிட்டால், உறுப்புகள் செயலிழக்கலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ஜேம்ஸ் செர்ரி, லாஸ் ஏஞ்சல்ஸ் ஹெல்த்லைனிடம் கூறியுள்ளார்.
இதுவே நோய் தொற்று தீவிரம் அடையும் போது , அது வயிறு, குடல், இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு காரணமாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM