கல்முனை பிரதேசத்தில் போதை பொருள் குளிசை மற்றும் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று போதைப் பொருள் தடுப்பு  பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கல்முனை  மதுரங்கா வீதியில் வைத்து குறித் இளைஞரை வழிமறித்து சோதனை செய்த போது அவரிடமிருந்து 17 போதைப் பொருள் குளிசை மற்றும் கஞ்சா என்பவற்றை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞர் எனவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.