கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது அமெரிக்காவில் ஆறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

China coronavirus

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கையில், குறித்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம்  ஒரு புதிய பெயரிடப்படாத பகுதிக்குள் பிரவேசிப்பதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது தற்போது புது சமூகங்களுக்குள் பரவுகிறது, என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தென் கொரியாவில், இன்று காலை மேலும் மூன்று இறப்புகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சியாட்டில், கிங் கவுண்டி ஆகியவற்றின் பொது சுகாதார நிறுவன தலைமை சுகாதார அதிகாரி ஜெஃப் டுச்சின், ஒரு செய்தி மாநாட்டில் COVID-19 இலிருந்து இறப்புக்கள் அதிகரிப்பதாக அறிவித்துள்ளதோடு 

நாடு முழுவதும் அதிகாரிகள் அதிக தொற்றுநோய்களுக்குத் தயாராகி வருவதால், கிடைக்கக்கூடிய சோதனை கருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் வொஷிங்டன் மாநிலத்தில் இந்த வைரஸ் பல வாரங்களாக கண்டறியப்படாமல் பரவி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்த நிலையில் குறித்த ஏற்பட்ட முதல் மரணத்திற்குப் பிறகு, ஆளுநர் ஜே இன்ஸ்லீ அவசரகால நிலையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து குறித்த மாநிலத்தில் மொத்தம் பெறப்பட்ட 18 பதிவுகளில்  நான்கு இறப்புகள் சியாட்டில் பகுதியில் பதிவானதுடன். தற்போது அது ஆறு பேராக அதிகரித்துள்ளது. இறந்த ஆறு பேரில் குறைந்தது நான்கு பேர் வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தற்போது சீனாவில் தொற்று குறைந்து வருவதாகத் தெரியவருகிறது. இந்த நேற்று 125 புதிய பதிவுகளை மட்டுமே அறிவித்தது, இது ஜனவரி மாதத்திலிருந்து பார்க்கும் போது மிகக் குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.