சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு அமெரிக்க நாணயத்தாள்களை கடத்த முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர். 

வெலிகமையை சேர்ந்த குறித்த பயணி,  இன்று காலை சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தயாராக இருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த அவரது பொதிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது,  சுங்கப்பிரிவினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அமெரிக்க நாணயத்தாள்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 60,90,400 ரூபா இலங்கை மதிப்புள்ள $ 33,100 அமெரிக்க டொலர்களை சுங்கப்பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். 

இதனையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட சுங்கப்பிரிவினர், குறித்த பயணியை எச்சரித்து விடுவித்துள்ளனர்.