(ஆர்.விதுஷா)

முன்வைத்த காலை நான் ஒரு­போதும் பின்­வைக்க மாட்டேன். ஐக்­கிய  தேசியக் கட்­சி­யினர்  உட்­பட  அனைத்து தரப்­பி­னரும் நம்­பிக்­கை­யுடன் வலது காலை முன்­வைத்து மக்கள் சக்தி கூட்­ட­ணி­யுடன்  இணைந்து கொள்­ள­வேண்டும்.  அச்­ச­மின்றி  வலு­வான  நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான  புதிய பய­ணத்தில் எம்முடன் கைகோ­ருங்கள் என்று எதிர்க்­கட்சித்  தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.  

ஐக்­கிய மக்கள் சக்தி  கூட்­ட­ணியின் அங்­கு­ரார்­ப்பண நிகழ்வு  நேற்று  திங்­கட்­கிழமை கொழும்பு  தாம­ரைத்­த­டாக    கலை­யரங்கில் இடம்பெற்­றது. இந்நிகழ்வில்  கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர்  இதனை  தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

இன்­றைய தினம் (நேற்று) வர­லாற்றில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த நாளாகும். இலங்கை அர­சியல் வர­லாற்றில் பல  முக்­கி­ய­மான சம்­ப­வங்கள் நடந்­தே­றிய  நாளாக  இன்­றைய தினம் அமைந்­துள்­ளது. அந்த வகையில் மக்கள் விரும்பும் ஜன­நா­யக ஆட்­சியின் ஆரம்­ப­மாக இந்த கூட்­ட­ணியை மக்கள்  மயப்­ப­டுத்­து­வ­தை­யிட்டு மகிழ்ச்சியடை­கின்றோம்.

பல சந்­தர்ப்­பங்­களில் இவ்­வா­றான கூட்­ட­ணிகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அந்த கூட்­ட­ணிகள் வெறு­மனே தேர்­தலை மைய­மாக கொண்­ட­தா­கவே இருந்­தன. ஆயினும் இந்த கூட்­ட­ணி­யா­னது அவ்­வா­றான கூட்­ட­ணி­யல்ல. மாறாக, நாட்டு மக்­க­ளுக்­காக தொடர்ந்து பய­ணிக்­க­வுள்ள கூட்­ட­ணி­யாகும்.  பொதுத்­தேர்­தலில்  வெற்­றி­ய­டைந்து தொடர்ந்து முன்­னோக்­கிய  இலக்கை   நோக்கி பய­ணிக்­க­வுள்ளோம். 

நாட்­டினுள்  புதிய  மாற்­றத்தை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவும் இன,மத, பேதங்­களை  மறந்து தாய்­நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­க­வுமே இந்த கூட்­டணி அமைக்­கப்­பட்­டுள்­ளது.  அனைத்து மதத்­த­வரும் சம­மான  உரி­மை­க­ளுடன் வாழத்­த­குந்த நாட்டை உரு­வாக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

இன­, மத பேதம் நாட்­டினுள் உரு­வா­வதை நாம் கடு­மை­யாக  கண்­டிக்­கின்றோம். அந்த வகை­யில் ­ப­யங்­க­ர­வாத, அடிப்­ப­டை­வாத சக்­தி­க­ளுக்கு நாட்­டினுள் இட­மில்லை. அத்­துடன், வன்­மு­றை­க­ளின்றி நாட்டில்  அனைத்து மக்­களும்  ஒன்­றி­ணைந்து வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

ஐக்­கிய மக்கள் சக்தி கூட்­ட­ணி­யா­னது  ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுவின்  ஏக­ம­ன­தான  தீர்­மா­னத்­துக்கமைய  உரு­வாக்­கப்­பட்ட கூட்­ட­ணி­யாகும். அந்த வகையில் இந்த கூட்­ட­ணியை தனி­ம­னி­தனால்  உரிமை கோர முடி­யாது. மாறாக  அனைத்து மக்­க­ளு­டைய  உரித்­தா­ன­தா­கவே  உருவாக்­கப்­பட்­டுள்­ளது.  ஏகா­தி­பத்­திய  செயற்­பா­டு­க­ளுக்கு இந்த கட்­சி­யினுள் இட­மில்லை.   மாறாக  அனைத்து மக்­களின் கருத்­துக்­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்கும் வகை­யி­லேயே இந்த கூட்­டணி  அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், இந்த கூட்­ட­ணியில்  தாய்­நாட்டுக்கும் நாட்டின் பிர­ஜை­க­ளுக்கும்  தேசிய பாது­காப்­புக்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.  நாட்டு பிர­ஜைகள்  ஒன்­றி­ணை­வதன் ஊடா­கவே  தேசிய  பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முடியும். அதன்  ஊடா­கவே சுபீட்­ச­மான எதிர்­கா­லத்தை உரு­வாக்கக்  கூடி­ய­தா­க­வி­ருக்கும்.

சிறந்த பொரு­ளா­தார கொள்­கை­களை   வகுப்­பதன் ஊடாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஏற்ற  நட­வ­டிக்­கைளை முன்­னெ­டுக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதி­யான  மாற்­றங்கள் ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் இந்த கால­கட்­டத்தில்  புதிய மாற்­றத்தை நோக்­கிய பய­ண­மாக  இது அமைய  வேண்டும். 

அந்த வகையில் ஊழல் மோச­டி­களில்  ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு இந்த கூட்­ட­ணியில்  இட­மில்லை. ஏனெனில் மக்கள்  தம் ­மத்தி­யி­லி­ருந்து வாக்­கு­களின் ஊடாக பிர­தி­நி­தி­களை தேர்வு செய்­வது அவர்­க­ளுக்­காக    சேவை­யாற்­று­வார்கள் என்ற  நம்­பிக்­கையில் ஆகும், அது தற்­கா­லி­க­மான  பத­வி­யாகும். அந்த பத­வியை  வகிக்கும் கால­கட்­டத்தில்  மக்­க­ளுக்­காக சேவை­யாற்ற  வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வலு­வ­டையதாக செய்­வ­தற்கு ஏது­வான  திட்டங்கள் வகுக்கப்படுவதுடன்,   உறுதியான பொருளாதாரத்தை உருவாக்க  வேண்டும். ஐக்கிய தேசியக்  கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரும் அச்சமின்றி  இந்த கூட்டணியில் இணைந்து கொள்ளலாம். எம்முடன்  கைகோர்த்த அனைவரையும்  பாதுகாப்போம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து சௌபாக்கியமும் செல்வச்செழிப்பும் மிகுந்த நாட்டை கட்டியெழுப்புவதன்  ஊடாக மக்கள் யுகத்தை உருவாக்குவதே எமது நோக்காகும் என்றார்.