ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டமை குறித்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுவ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதிபதி அவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் 03-03-2020 இன்று நீதிபதி கீர்த்தி கும்புறுஹேன முன்னிலையில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபரெனக் கருதப்படும் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டார். 

இந்நிலையில் நீதிபதி குறித்த நபரை 05-03-2020 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி பெரகலை என்ற இடத்தில் வைத்து தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி ஹல்துமுள்ளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை தாக்கியவரென கருதப்படும் பெரகலையைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.