சீரற்ற காலநிலையிலும் கடலிற்கு செல்லும் மீனவர்களின் நலன்கருதி டயலொக் ஆசியாட்டா நிறுவனம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் குரல் செய்திச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

மீனவர்கள் காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதனை நோக்காக கொண்டு இச்சேவையை மூன்று மொழிகளிலும் வழங்குகின்றமை குறிப்பிடதக்கது. 

இந்த சேவைக்கு சயுரு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவையை அறிமுகம் செய்யும் நிகழ்வு தங்காலை மீன்பிடித்துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

வளிமண்டவியல் திணைக்களத்துடன் இணைந்து கடற்றொழில் திணைக்களமும் டயலொக் ஆசியாட்டா நிறுவனமும் இந்த சேவையை முன்னெடுக்கின்றமை  முக்கிய விடயமாகும்.