கிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த  கர்ப்பவதி உயிரிழப்பு -  பொது மக்களை வழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 10:36 AM
image

கிளிநொச்சியில் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் வயது தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களைக் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பவதி ஒருவர் நேற்றைய தினம் (02-03-2020) காலையிலிருந்து கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இருப்பினும் அது சிறுநீர் தொற்று காரணமாக ஏற்பட்ட வயிற்று வலி என எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. 

இந்நிலையில் பிற்பகல் திடீரென மயங்கி விழுந்தவரை தருமபுரம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தபோது அவரது இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது. தருமபுர வைத்தியசாலை ஊழியர்களால் கடுமையாக முயற்சித்து இதயத்தை மீள இயங்க வைத்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட  குறித்த தாய்க்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அதிக இரத்தப்போக்கு காரணமாக அங்கு அவர் உயிரிழந்தார்.

இவரது கர்ப்பமானது கர்ப்பப்பைக்கு வெளியே தங்கியதால் வயிற்றறையில் ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கே இந்த மரணத்திற்குக் காரணம் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் 2007ம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது கர்ப்பகால மரணம் இது என்பதால் முழு வைத்தியசாலையும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

கர்ப்ப காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, தலைசுற்றல் முதலிய எந்த ஒரு அறிகுறிகளையும் கர்ப்பவதிகள் சாதாரணமாக எடுக்காமல் உடனடியாக தமது பகுதி குடும்ப நல உத்தியோத்தர்களிடம் தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை பெற்றோ கர்ப்பகாலங்களில் ஏற்படக்கூடிய இவ்வாறான அபாய நிலைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27