பல இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!

02 Mar, 2020 | 05:20 PM
image

முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப்பகுதியில் இடம்பெற்றவிருந்த பாரிய மரக்கடத்தலை  முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினர் முறியடித்துள்ளனர். 

குறித்த மரக்கடத்தல் சம்பவம் இன்று(2) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றிருந்த வேளை  வன திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு  உளவியந்திரம் ஒன்றில் கடத்தப்பட்ட பெறுமதியான மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன . 

இதன்போது மரக்கடத்தலில் ஈடுபட்ட  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மூவர் தப்பியோடியுள்ளனர். 

இதில்  ஆறு இலட்சம் ரூபா பெறுமதியிலான முதிரை மரதுண்டங்கள், பலகைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரம்  என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

மிக நீண்டநாட்களாக வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த  சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்சியாக முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினரால் அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

குறைவான ஆளணி வளங்களுடன் இயங்கிவரும் முல்லைத்தீவு வட்டார வன அலுவலகம் பாரிய நிலப்பரப்பை  காடாக கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில்  இடம்பெறும் மரக்கடத்தல்களை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் முறியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப்...

2022-12-08 16:10:34
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07