பயணிகள் 66 பேருடன் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி மத்திய தரைக்கடலில் விழுந்த எம்.எஸ் 804 என்னும் எகிப்து விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கறுப்புப்பெட்டியில் சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அதன் நினைவகப் பகுதிகளில் எவ்வித சேதமும் ஏற்படவில்லையென எகிப்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த கறுப்புப் பெட்டியின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பிலான பல புதிய தகவல்கள் வெளிவருமென நம்பப்படுகின்றது.