இலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான தம்­மிக்க பிரசாத் காயம்  கார­ணமாக நியூ­ஸி­லாந்து அணி­யு­டனான டெஸ்ட்
போட்­டி­யி­லிருந்து வில­கி­யி­ருக்­கிறார். அவ­ருக்கு பதி­லாக நியூ­ஸி­லாந்து அணி­யுடன் நடை­பெ­ற­வுள்ள  இரண்டு போட்­டி­களிலும் விளை­யாட இலங்கை அணிக்கு புதிய வீர­ராக பந்­து­வீச்­சாளர் விஷ்வ பெர்­ணான்டோ இணைக்­கப்­பட்­டுள்ளார்.

இலங்கை அணி நியூ­ஸி­லாந்­திற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்டு இரண்டு டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 2 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ளது. இதன்­படி டெஸ்ட் போட்­டிக்­கான அணி நியூ­ஸி­லாந்து சென்­ற­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் 10ஆம் திகதி முத­லா­வது டெஸ்ட் போட்டி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் சபை லெவன் அணி­யுடன் நடை­பெற்றபயிற்சிப் போட்­டியின் போது தம்­மிக்க பிரசாத் காயத்­திற்கு உள்­ளானார். இந்­நி­லை­யி­லேயே அவருக்கு பதிலாக  விஷ்வ பெர்ணான்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.