மாவனெல்ல பகுதியில் பல புத்தர் சிலைகளை உடைத்தமைக்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 32 பேருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் மாவனெல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவனெல்ல மற்றும் அதனை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அமைதியீன்மையின் போது இவ்வாறு புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.