ஹொரணை - பேருவ பகுதியில் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சிசுவின் சடலத்தின் பாகங்கள் 2 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் குழந்தையின் இடுப்புக்குக் கீழ் பகுதி இன்னும் கண்டறியப்படவில்லையென  பொலிஸார் குறிப்பிட்டனர். 

அப்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த நாயொன்று குறித்த சிசுவின்   தலைப்பகுதியை கொண்டு வந்து வீட்டினருகில் போட்டிருந்ததைக் கண்ட வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

அதற்கமைய மீகஹதென்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஜே. ஆரியவங்ஷ உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த சிசுவின்  சடலத்தின் மற்றைய பாகம் பழைய மலசலகூடமொன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பெண்ணின் தாகாத தொடர்பு வைத்திருந்த நிலையிலேயே குறித்த குழந்தை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகஹதென்ன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.