அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் வோன்சனுக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியிலிருந்து அவை கடலுக்குள் ஏவப்பட்டுள்ளதாக சியோலின் இராணுவம் கூறியுள்ளது.

குறித்த இரு ஏவுகணைகளும் 22 மைல் உயரத்தில் பறந்து 150 மைல் தூரத்திறக்கு சென்றுள்ளதாகவும் சியோலின் கூட்டுப் படைத் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் வட கொரியாவின் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தென் கொரியாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஹனோய் நகரில் வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் உச்சிமாநாட்டின் ஓராண்டு நிறைவு நாளான வெள்ளியன்று வட கொரியாவின் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.