எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய ”ஐக்கிய மக்கள் சக்தி” இன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிலையில், 10கட்சிகள், 20 சிவில் அமைப்புகள் மற்றும் 18 தொழிற்சங்கங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளது.

மேலும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு, குறித்த விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் விழாவிற்கு சமூகமளித்திருக்கவில்லை. எனினும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஐ.தே.க. வின் உறுப்பினர்களின்  பற்கேற்பானது 95%  காணப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.