பாடசாலை மாணவியொருவருக்கு உயர்தர மாணவியினால் ஊசியின் மூலம் பலவந்தமாக மருந்தொன்றை செலுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பொலநறுவையிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பொலநறுவையிலுள்ள குறித்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவிக்கு அதே பாடசாலையில் கல்வி பயின்றுவரும் உயர்தர மாணவியொருவர் ஊசியின் மூலம் மருந்தொன்றை செலுத்தியுள்ளார்.

அம்மாணவி பாடசாலையின் கழிப்பறைக்கு சென்று திரும்பி வரும் போதே குறித்த மாணவியினால் பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டு ஊசியின் மூலம் மருந்தொன்று செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.