கஞ்சா போதைப்பொருளை புகைப்பிடித்து கொண்டிருந்த பஸ் சாரதி ஒருவர் அன்கும்புர பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி மற்றும் அன்கும்புர பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், பஸ் உரிமையாளரின் மகன் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.