கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஜிபிஎஸ் கருவி என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி  நோக்கிப் பயணித்த வாகனமொன்றைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப்புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனைக்கு உட்படுத்திய போது, ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பது கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் ஜி.பி.எஸ் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து வாகனத்தின் சாரதி விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.