(எம்.மனோசித்ரா)

இலங்கையின் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டு 69 வருட ஆண்டு நிறைவு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தலைமையில் இன்று கொண்டாடப்படுகின்றது.

1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கையில் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் 2 ஆம் திகதி விமானப்படை சம்மேளனம் நடத்தப்பட்டு வருகிறது.

17 விமானப்படை தளபதிகளின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டுக்கான சேவையில் 69 வருடங்களை எட்டியுள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.