கொரோனா வைரஸ் - ஐரோப்பாவில் முத்தத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது

01 Mar, 2020 | 09:48 PM
image

அசோசியேட்டட் பிரஸ்

சில நாட்களிற்கு முன்னர் நேப்பிளசில் பிரான்ஸ் இத்தாலி உச்சி மாநாடு இடம்பெற்றவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இத்தாலிய பிரதமரை இரண்டு தடவைகள் முத்தமிட்டார்.

அது வெறுமனே நட்புறவை வெளிப்படுத்தும் முத்தம் மாத்திரமல்ல.

கொரோன வைரஸ் அச்சம் உலகை ஆட்கொண்டுள்ள சூழலில்  உங்கள் அயலவர்களை பார்த்து அஞ்சவேண்டாம் என மக்களிற்கு தெரிவிக்கும் செய்தியாகவும் அந்த முத்தம் காணப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக, நட்பை வெளிப்படுத்துவதற்கு முத்தமிடுவதும் தர்மசங்கடமானதாக மாறியுள்ளது.

குறிப்பாக தென்ஐரோப்பாவில் இந்த நிலை காணப்படுகின்றது.

இத்தாலிய அரசாங்கத்தின் கொரோன வைரசிற்கான விசேட ஆணையாளர் இத்தாலியர்கள் தங்கள் நெருக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துவதற்கு கையாளும் வழிமுறைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

எனினும் இத்தாலியின் மத்தியதரைக்கடல் கலாச்சாரத்தில் ஆழமாக வேருன்றிய இத்தாலியின் சமூக குடும்ப கட்டமைப்புகளிலும் வலுவானதாக காணப்படுகின்ற விடயம் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்ற முத்தத்தை தடை செய்வதற்கான உத்தரவு எதுவும் வெளியாகவில்லை.

நாங்கள் மிகவும் வனப்புடைய கூட்டு சமூக வாழ்க்கையை கொண்டுள்ளோம்,எங்களிற்கு நிறைய தொடர்புகள் உள்ளன நாங்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடுவோம், கட்டியணைப்போம் என இத்தாலிய அரசாங்கத்தின் கொரோன வைரசிற்கான விசேட ஆணையாளர் அஞ்ஞலோ பொரொலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் இந்த சூழ்நிலையில் கைகுலுக்காமலிருப்பதும் உடல்ரீதியில் தொடுகைகளை தவிர்ப்பதும சிறந்த விடயம் என அவர் குறி;ப்பிட்டார்.

பிரான்சில் சுகாதார அமைச்சர் கன்னத்தில் முத்தமிடும் கைகுலுக்கிக்கொள்ளும் சம்பிரதாயத்தை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜேர்மனியில் சிறுவர்கள் பெரியவர்களுடன் கைகுலுக்கிகொள்வது சிறுவயது முதல் கற்றுக்கொடுக்கப்படும் சம்பிரதாயமாக காணப்படுகின்றது. சிறுவர்களின் கரங்களின் வலிமையை அறிவதே இதன் நோக்கம் .

 எனினும் சுகாதார நிபுணர்களும் மருத்துவர்களும் இதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

பேர்லினில் உள்ள வேர்ச்சோ மருத்துவமனையில் நோயாளிகளுடன் கைகுலுக்கி கொள்வதை  மருத்துவர்கள் நிறுத்தியுள்ளதுடன் நோயாளிகளை தங்களை பின்பற்றுமாறு கேட்டுள்ளனர்.

கைகுலுக்குவதே கொரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழிமுறையாக உள்ளது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right