(எம்.மனோசித்ரா)

பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. 

இந் நிலையில் வெகு விரைவில் தேர்தல் நியமனக் குழு கூடி ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் ஓரிரு வாரத்திற்குள் இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா? என வினவியதற்கு பதிலளித்த அவர் ' ஆம். இவ்விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் இவ்விடயம் பற்றி கலந்துரையாடியிருக்கின்றோம். வெகு விரைவில் எமது தீர்மானம் அறிவிக்கப்படும்  என்றார்.