(செ.தேன்­மொழி)

சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்தும் வகையில் சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளூ­டாக வெளி­வந்த காணொளி தொடர்பில் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவின் பணிப்­பாளர் சாலிய சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தற்­போது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்த காணொளி விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்பில் அவ­ரிடம் வின­விய போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இதன்­போது அவர் மேலும் கூறி­ய­தா­வது,

சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்தும் காணொ­ளியின் இறு­வட்டு எமக்கு கிடைத்­ததை அடுத்து விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­க­மைய பொலிஸார் , பொலிஸ் குற்­றப்­பி­ரி­வினர் , பொலிஸ் பிரிவின் தொழில்­நுட்பம் மற்றும் இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வினர் ஆகியோர்  பரி­சீ­ல­னை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இந்­நி­லையில் தொடர்ந்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எமது விசா­ர­ணைக்கு சிறுவர் பாது­காப்பு பிரி­வி­னரும் பெரும் ஒத்­து­ழைப்­பு­களை பெற்றுக் கொடுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் சந்­தேக நபரை அடை­யாளம் காணு­வ­தற்­கான அனைத்து விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன்,  விரைவில் அவரை அடை­யாளம் காண­மு­டியும் என்று எதிர்­பார்க்­கின்றோம். இந்­நி­லையில் சம்பவம் தொடர்பான தீவிர பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதினால் குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித் துள்ளனர் என்றும் தெரிவித்தார்.