மலேஷியாவின் புதிய பிரதமராக  முஹைதீன் யாசின் இன்று பதவியேற்றுள்ளார்.

பெரும் எதிர்­பார்ப்பு மற்றும் நீண்ட இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர்  மலே­ஷி­யாவின் புதிய பிர­த­ம­ராக முஹைதீன் யாசின் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக மலே­ஷிய மன்னர் சுல்தான் அப்­துல்லாஹ் நேற்று அறி­வித்தார்.

அவர் பிர­த­ம­ராக அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து நாட்டின் தலை­மைக்­கான போட்டி நேற்­றுடன் முடி­வுக்கு வந்­துள்­ள­தாக அந் நாட்டுத் தக­வல்கள் தெரி­வித்தன. 

இது­கு­றித்து மலே­ஷி­யாவின் அரண்­மனை தரப்பில் வெளி­யிட்­ட அறிக்­கையில், ‘முன்னாள் உள்­துறை அமைச்சர் முஹைதீன் யாசின் மலே­ஷி­யாவின் புதிய பிர­த­ம­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஞாயிற்­றுக்­கி­ழமை (இன்று) பதவி ஏற்­ப்பார்’ என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அனைத்து கட்சித் தலை­வர்­களின் பிர­தி­நி­திகள், தனிப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோரின் கருத்­து­களைக் கேட்­ட­றிந்த பின்­னரே மலே­ஷிய மன்னர் இதனை அறி­வித்­த­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

பிர­தமர் மகாதீர் முக­மது தலை­மை­யி­லான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கிய நிலையில், அவர் இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து, பிர­தமர் பொறுப்பை அன்வர் இப்­ரா­ஹி­மிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்று கூட்­டணிக் கட்­சியில் சில பிரிவினர் வலியுறுத்தி வந்த நிலையிலேயே முஹைதீன் யாசின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

PHOTO: AFP