
பாகிஸ்தானிடம் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானிக்குமானால் அது மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பாக்கிஸ்தானின் ஜே.எவ். போர் விமானங்கள் பத்தினை கொள்வனவு செய்வது தொடர்பாக இலங்கை விமானப்படைக்கும் பாக்கிஸ்தானின் விமானப்படைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு குறித்து இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக முக்கிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் விமானப்படை தளபதி ஜயலத்வீரக்கொடி பாக்கிஸ்தானின் தூதுவராக பணியாற்றிய காலப்பகுதியில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரியவருகின்றது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டுத்தயாரிப்பான இந்த வகைவிமானங்கள் வான்வெளி கண்காணிப்பு மற்றும் தாக்குதல், விமானங்களை இடைமறித்தல் போன்றவற்றை சிறப்பாக மேற்கொள்ளகூடியவை.
இதேவேளை இந்த உடன்படிக்கை குறித்து இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர்அஜித் டோவல் இந்தியாவின் கரிசனையை பிரதமருக்கு .ஜனாதிபதிக்கும் நேரடியாக தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை நேரடியாக தொலைபேசியில் தொடாபுகொண்ட அவர் இந்த விடயம் குறித்த இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாக்கிஸ்தானின் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானிக்குமானால் அது மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை இலங்கை இந்தியாவிடமிருந்து மூன்று கடற்படை கப்பல்களை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது எனினும் இதனை நிராகரித்துள்ள இந்தியா போர்விமானங்கள் குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
இதன் பின்னர் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்தியாவிடமிருந்து அதே ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அல்லது வேறு விமானங்களை கொள்வனவு செய்ய தயார் என அறிவித்தள்ளது.
எனினும் இது குறித்து தெளிவான பதிலை அளிக்காத இந்தியா விமானங்களை கொள்வனவுசெய்வதற்கான கடனுதவியை வழங்க தான் தயார் எனவும் எனினும் இலங்கை பாக்கிஸ்தானை தவிரவேறு எந்த நாட்டிலிருந்தும் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை பாக்கிஸ்தான் பிரதமர் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது விமானக்கொள்வனவு குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM