சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு பிறகு நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கோப்ரா.  இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சீயான் விக்ரம் இருபதிற்கும் மேற்பட்ட வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதில் சீயான் விக்ரமின் எட்டு விதமான தோற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இணையத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதனிடையே நடிகர் சீயான் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பதும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.