இலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள Huawei Y3II மற்றும் Y5II

Published By: Priyatharshan

17 Jun, 2016 | 11:57 AM
image

இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது Y வகுப்பு ஸ்மார்ட்போன் வரிசையில் Y3II மற்றும் Y5II ஆகிய இரு புதிய அடிப்படை வகை ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அறிவித்துள்ளது.

3G மற்றும் 4G ஆகிய இரு தொழில்நுட்பங்களிலும் கிடைக்கப்பெறுகின்ற Y5II ஆனது முறையே ரூபா 14,199 மற்றும் ரூபா 15,199 என்ற விலை முதற்கொண்டும்ரூபவ் 3G தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Y3II ஆனது ரூபா 10,999 என்ற விலை முதற்கொண்டும் கிடைக்கப் பெறுகின்றன.

இலகுவாக அழுத்துவது (press), இரட்டை-அழுத்தல் (double-press) அல்லது அழுத்தி-தாங்கி வைத்திருத்தல் (press-and-hold) மூலமாக நேரடியாக தாங்கள் விரும்புகின்ற உள்ளடக்கத்திற்கு குறுகிய வழிமுறையில் செல்லும் வசதியாக அமைந்துள்ள தனித்துவமான “Easy Key” தொழில்நுட்பத்துடன் இரு சாதனங்களும் வெளிவந்துள்ளன.

Y3II சாதனமானது அழைப்பு ஒன்று உள்வரும் சமயத்தில் ஒளிர்கின்ற “Rainbow Light” என்ற தொழில்நுட்ப அம்சத்தைக் கொண்டுள்ளதுடன் தொடர்பாடல் உசார்படுத்தல்கள் (alerts) மற்றும் குறிகாட்டல்களுக்கு (notifications) பின்புற கமராவைச் சூழ கவர்ச்சியான வர்ண ஒளிர்வையும் ஏற்படுத்துகின்றது. Y5II முன்பக்க கமரா ஆனது ஒளிப்பாய்ச்சல் (flash) உடன் வெளிவந்து செல்பி எடுப்பதில் புதிய பரிமாணத்திற்கு வித்திட்டுள்ளது. இரு சாதனங்களும் கறுப்பு மற்றும் பொன் நிறங்களில் கிடைக்கப்பெறுவதுடன் சிங்கர் வழங்கும் ஒரு வருட உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு இப்புதிய உற்பத்திகளின் அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

“உலகிலுள்ள மிகப் பாரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான GFK இன் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையில் 2016 ஆம் ஆண்டின் முதற்காலாண்டில் 23.30% சந்தைப்பங்கினை நாம் எட்டியுள்ளமையை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் நியாயமான விலைகளில் மகத்தான தரம் கொண்ட புரட்சிகரமான உற்பத்திகளை அறிமுகப்படுத்தி வருவதே எமது வெற்றிகளுக்கான மூல காரணம். எமது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் நாம் கொண்டுள்ள உறுதியான பங்குடமையின் மூலமாக Huawei வர்த்தகநாமத்தை அனைத்து இலங்கை மக்களும் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடெங்கிலும் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதை மேலும் பலப்படுத்தும் வகையில் மீண்டும் ஒரு தடவை இரு புதிய உற்பத்திகளை நியாயமான விலைகளில்அறிமுகப்படுத்துவதையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளோம்”.

இலங்கையில் Huawei சாதனங்களின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான ருவான் கமகே கருத்து வெளியிடுகையில்,

“நவீன தொழில்நுட்பம், புத்தாக்கம், உறுதியான தொழிற்பாட்டுத்திறன் மற்றும் மிகச் சிறந்த விலையில் மிகச் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள் அடங்கலாக வேறுபட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான உற்பத்திகளை Huawei அறிமுகப்படுத்தி வருகின்றது.

இலங்கையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக Huawei வளர்ச்சி கண்டு வருவதுடன், தற்போது அது நாட்டில் இரண்டாவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக திகழ்ந்து வருகின்றது. வர்த்தகநாமத்திற்கும், அதன் பாவனையாளர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தல் மற்றும் சிங்கர் மூலமாக எமது உறுதியான உதவு சேவை மற்றும் விநியோக வலையமைப்பு ஆகியன இவ்வர்த்தகநாமத்தின் தனிச்சிறப்பினை உறுதிப்படுத்தி வருகின்றன.

Huawei Y3II sports ஆனது 5 megapixel அடிப்படை கமராவையும் 2 megapixel முன்புற கமராவையும் கொண்டுள்ளது. Y5II ஆனது 8 megapixel பின்புற கமரா மற்றும் flash உடனான 2 megapixel முன்புற கமராவைக் கொண்டுள்ளது.

Huawei Y3II மற்றும் Y5II ஆகியன முறையே 2,100 mAh மற்றும் 2>200 mAh மின்கலங்களைக் கொண்டுள்ளன. இலங்கையில் ஸ்மார்ட்போன்களைச் சந்தைப்படுத்துவதில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம்ரூபவ் சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் அடங்கலாக நாட்டிலுள்ள சிங்கரின் விசாலமான விற்பனை வலையமைப்பின் மூலமாக Huawei உற்பத்திகள் அனைவருக்கும் கிடைக்கப்பெறுகின்றன. இதில் நாடெங்கிலுமுள்ள 400 இற்கும் மேற்பட்ட சிங்கர் விற்பனை காட்சியறைகள் மற்றும் 1500 டிஜிட்டல் மீடியா விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் மீடியா விநியோக மார்க்கமும் அடங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் ஆடை துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...

2025-01-22 18:11:55
news-image

இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஹெக்ஸாவேர்...

2025-01-23 22:17:56
news-image

சுப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கல்

2025-01-22 15:31:41
news-image

SDB தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக...

2025-01-22 15:30:55
news-image

' கொமர்ஷல் வங்கி 'ஆண்டின் பசுமை...

2025-01-22 15:10:50
news-image

12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024...

2025-01-22 15:43:00
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரண்டு...

2025-01-22 15:10:26
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-22 15:42:44
news-image

LOLC பைனான்ஸ் வழங்கும் முதல் பிரெய்லி...

2025-01-22 15:09:09
news-image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து...

2025-01-22 13:46:35
news-image

MMCA இலங்கை ‘முழு நில அமைப்பு’...

2025-01-15 11:09:05
news-image

இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு விமான...

2025-01-12 09:58:53